மட்டக்களப்பு-வாகரை காரமுனையில் திட்டமிட்ட வெளி மாவட்ட சிங்கள மக்களை மிகவும் இரகசியமான முறையில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில் குடியேற்ற எடுத்த முயற்சியை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் வியாழக்கிழமை (21.10.2021) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 பேருக்கு காணி வழங்குவதற்கு இன்று காலை புனானை வனவிலங்கு திணைக்கள கட்டிடத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மாநகர சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இணைந்து குறித்த காணி வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
புனானையில் காணி தொடர்பாக தகவல் பதிவுசெய்யப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு காரமுனைக்கு தங்களது இடங்களை காண்பிக்க சென்றபோது ஆணையாளருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு ஆர்ப்பாட்டமாக மாறியிருந்தது.
இதன்போது அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை உடன் நிறுத்தக்கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஆணையாளர் குறித்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கம் சார்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்தபோதும் ஒருவர் இந்தியாவிலும் மற்றவர் கொழும்பிலும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சிங்கள குடியேற்றம் திட்டமிட்டு இடம்பெறுவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM