நீண்ட நாட்களின் பின் வரையறுக்கப்பட்டளவில் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்

By Gayathri

21 Oct, 2021 | 05:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புதுவருட கொவிட் கொத்தணி தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில்  சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய நான்கு கட்டமாக பாடசாலைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய முதற்கட்டமாக நாடுதழுவிய ரீதியில் 200 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள 3800 பாடசாலைகள் நேற்றைய தினம்  சுகதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய திறக்கப்பட்டன.

ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை நூற்றுக்கு 80 சதவீதமாக காணப்பட்டது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் வழமை நிலைக்கு திரும்பும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகள் திறக்கப்பட்டபோதும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை மிகவும் குறைவான மட்டத்தில் காணப்பட்டன. 

ஒரு சில பாடசாலைகளில் மாணவர்கள் சமூகமளித்துள்ளபோதும் ஆசிரியர்கள் சமூகமளிக்கவில்லை. ஆசிரியர்கள் சமூகமளித்தபோதும் மாணவர்கள் சமூகமளிக்க வில்லை. 

பட்டதாரி பயிலுனர் ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்தமையினை பல்வேறு பிரதேசங்களில் அவதானிக்க முடிந்தது. திறக்கப்பட்ட பாடசாலைகளின் பாதுகாப்பிற்காக ஆயுதமேந்திய பொலிஸார் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

முகக்கவசம் அணிதல், கைக்கழுவுதல், சமூக இடைவெளியை பேணுதல் ஆகியவற்றை பாடசாலை மாணவர்கள் கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாணவர்கள் இடைவேளையின்போது நண்பர்களுடன் உணவை பரிமாற்றிக் கொள்வது தவிர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் சளி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் என சுகாதார தரப்பினர் பெற்றோரிடம் வலியுறுத்தினர்.

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்களும், அதிபர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்கு சமூகமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

இன்றைய தினம் ஆசிரியர், மாணவர்களின் வருகை குறைவான மட்டத்தில் காணப்பட்டது. இருப்பினும் எதிர்வரும் வாரம் முதல் நிலைமை வழமைக்கு திரும்பும் என பெற்றோர் குறிப்பிடுகிறார்கள்.

குருநாகல், அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில பாடசாலைகளுக்கு சமூகமளித்த மாணவர்கள் ஆசிரியர், சகமாணவர்கள் வருகை தராத காரணத்தினால் மீண்டும் வீடு திரும்பியதை காண முடிகிறது.

ஒரு சில பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 5 இற்கும் குறைவானதாகவும், ஒரு சில பாடசாலைகள் திறக்கப்படாமலும் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

கொழும்பு மாவட்டத்தில்  200 இற்கும குறைவான மாணவர்கள் உள்ள 26 பாடசாலைகள் உள்ளன. இப்பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவர்களின் வருகை 40 சதவீதமாகவும், ஆசிரியர்களின் வருகை 80 சதவீதமாகவும் காணப்பட்டது.

எதிர்வரும் வாரம் முதல் மாணவர்களின் கற்றல் நிலை வழமை நிலைக்கு திரும்பும் என கொழும்பு கல்வி வலய ஜே.என்.சில்வா தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  200 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. 

மாணவர்களின் வருகை அதிகளவில் காணப்பட்டபோதும் ஆசிரியர்களின் வருகை குறைந்தளவில் காணப்பட்டது. 

மலையக பகுதியில் 200 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகள் முழுமையாக திறக்கப்பட்டன.

குறைந்தளவிலான மாணவர்களும், ஆசிரியர்களும் பாடசாலைக்கு சமூகமளித்தனர் என மத்திய மாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பொதுநலவாய அமைப்பின்...

2023-01-26 13:18:06
news-image

தென் கொரிய தூதுவர் - அமைச்சர்...

2023-01-26 22:06:56
news-image

தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில்...

2023-01-26 16:36:14
news-image

தேர்தலுக்கு தயாரில்லை என்பதை ஜனாதிபதி மக்களுக்கு...

2023-01-26 11:37:42
news-image

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம் !

2023-01-26 14:18:06
news-image

வரலாற்று சிறப்புமிக்க குசனார்மலைக்கு சாணக்கியனின் அழைப்பில்...

2023-01-26 17:30:34
news-image

புதிய வரி அறவீட்டு முறைக்கு எதிர்ப்பு...

2023-01-26 22:07:49
news-image

இலங்கையின் வளர்ச்சியில் பிரதான பங்காளியாக இந்தியா...

2023-01-26 16:24:24
news-image

படகில் 49 கிலோ கஞ்சா கடத்திய...

2023-01-26 16:05:57
news-image

கடன்வழங்கிய முக்கிய நாடுகளின் இறுதி உத்தரவாதம்...

2023-01-26 17:00:45
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், தொழில்...

2023-01-26 16:09:08
news-image

10 பொலிஸ் அதிகாரிகள் பிரதிப் பொலிஸ்...

2023-01-26 17:01:10