மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் இன்று வவுனியாவிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா தமிழ் மத்திய மாகாவித்தியாலயத்தில் காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த செயற்றிட்டத்தின் ஒழுங்குகளை காலை 9 மணியளவில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நேரடியாக வந்து பார்வையிட்டிருந்தார்.

18 தொடக்கம் 19 வயது பிரிவினருக்கு வழங்கப்பட்ட குறித்த பைசர் தடுப்பூசிகளை மாணவர்கள் ஆர்வத்துடன் ஏற்றிக்கொண்டிருந்ததுடன் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை வைத்தியர்கள் மற்றும் சுகாதார பிரிவினரால் குறித்த தடுப்பூசி மாணவர்களுக்கு ஏற்றப்பட்டது.