அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள்தலைவர் உதுல் பிரேமத்னவை தாக்கியதாக கூறப்படும் 6 கடற்படை சிப்பாய்களை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை புதுக்கடை நீதவான் நீதமன்றம் நேற்று (20) பிறப்பித்துள்ளது.

உதுல் பிரேமத்னவை தாக்கியதாக கூறப்படும் 6 கடற்படை சிப்பாய்களும் கடந்த 19 ஆம் திகதி சரணடைந்திருந்த நிலையில், நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஐவர் கடற்படை சிப்பாய்களாக தற்போதுவரை பணி புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வெள்ளவத்தை பகுதியில் வைத்து  உதுல் பிரேமரத்ன தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.