உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்ததையடுத்து வவுனியாவில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று மக்கள் கூட்டம் அதிகளவாக காணப்படுகின்றது.

இந்நிலையில் வவுனியாவிலுள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதையடுத்து இலங்கையில் அதற்கேற்ப விலை அதிகரிக்கப்படாததால் ஒக்டோபர் மாதம் நிறைவடையும்போது ஏழாயிரம் கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.