நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 200 மாணவர்களுக்கு குறைவாக கல்வி கற்கும் பாடசாலைகள் இன்று வியாழக்கிழமை (21) திறக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் 588 பாடசாலைகள் இன்று திறக்கப்படுவதாக மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் தெரிவித்தார்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணி பாடசாலைகளுக்கு வருகைத் தந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 36 பாடசாலைகள் திறக்கப்பட்டதாக வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரன் தெரிவித்தார்.

மாணவர்களின் வரவு குறைவாக இருந்தபோதிலும் அதிபர் ஆசிரியர்கள் பெருமளவில் சமூகமளித்திருந்தனர்.