200 க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொழும்பில் சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தந்திருந்ததையும் , சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் வருகை தந்திருந்ததையும் , சில பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. 

இதேவேளை அதிபர்-ஆசியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இன்றும் நாளையும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க போவதில்லை எனவும் எதிர்வரும் 25 அம் திகதி பாடசாலைகளுக்கு சமூகமளித்து மாற்று போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றும் நாளையும் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நவம்பர் மாத சம்பளம் இடைநிறுத்தப்படும் என வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு : எம்.எஸ்.சலீம்)