(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (21.10.2021) பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். 

இதன் போது சபை முதல்வர் தினேஷ் குணவர்தன , இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், நாலக கொடஹேவா, காஞ்சன விஜேசேகர, அனுந்திக பெர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இசுரு தொடங்கொட ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.

ஜனாதிபதி ராஜபக்ஷ சபைக்குள் பிரவேசித்த போது , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டனை 27/2 இன் கீழ் கேள்வியெழுப்பப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பதிலளித்தனர்.