அரசாங்கத்தின் வெறுப்புப்பேச்சே ஆசிரியர் - அதிபர்களின் போராட்டம் தீவிரமடையக் காரணம் - சந்திம வீரக்கொடி

Published By: Digital Desk 2

21 Oct, 2021 | 02:47 PM
image

இராஜதுரை ஹஷான்

பலவந்தமான முறையில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர முடியாது. தெற்காசிய நாடுகளில் இலங்கையிலேயே ஆசிரியர்-அதிபர் சேவைக்கு குறைந்தளவு மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

அரசாங்கத்தின் ஒரு சில உறுப்பினர்களது வெறுக்கத்தக்க பேச்சுக்கள் ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது என  பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

காலி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளில் 200இற்கும் குறைவா மாணவர்களை கொண்ட  பாடசாலைகள் முதற்கட்டமாக திறக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறந்து கல்வி துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர்செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானது.சுமார் 24 வருடகாலமாக சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தீர்வு காண முயற்சித்த போதும்,அம் முயற்சிகள் வெற்றிப் பெறவில்லை.

ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை ஆளும் தரப்பில் உள்ள ஒரு சில உறுப்பினர்கள் தான் தீவிரப்படுத்தினார்கள்.

ஆசிரியர்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களை குறிப்பிட்டு ஆசிரியர்-அதிபர்களுக்கு உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தினார்கள். 

தற்போதும் தேவையற்ற கருத்துக்களை அரசியல் அனுபவமில்லாத பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறாக வழிநடத்தி 2022 அரகலய போராட்ட...

2024-09-17 09:41:57
news-image

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை...

2024-09-17 09:33:55
news-image

சம்மாந்துறையில் சகோதரர்களுக்கிடையில் துப்பாக்கி சூடு :...

2024-09-17 07:40:15
news-image

இன்றைய வானிலை

2024-09-17 06:10:26
news-image

 நாட்டை மீண்டும் இருளில் தள்ளும் வரிசை...

2024-09-17 02:24:56
news-image

ஜனாதிபதி எப்போதும் தேர்தலுக்காக அன்றி நாட்டு...

2024-09-17 02:18:58
news-image

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில்...

2024-09-17 02:07:33
news-image

தொங்கு பாலத்தின் 75% பயணம் முடிந்தது:...

2024-09-16 23:33:45
news-image

தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் பரப்புரைக் கூட்டத்தில்;...

2024-09-16 22:28:22
news-image

எந்தவொரு வேட்பாளரும் தேசிய பிரச்சினைக்கான தீர்வினை...

2024-09-16 19:07:55
news-image

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும் சிங்கள வேட்பாளருக்கு...

2024-09-16 19:09:58
news-image

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை -...

2024-09-16 19:05:52