எம்.மனோசித்ரா

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் கஜிமாவத்தை பிரதேசத்தில் இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு , கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.