சீனாவின் வடகிழக்கு நகரமான ஷென்யாங்கில் அமைந்துள்ள உணவகமொன்றில் வியாழக்கிழமை காலை  ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடி விபத்தில் குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்.

A suspected gas explosion has damaged multiple buildings and cars in Shenyang, capital of Liaoning province in northeastern China. Photo: Handout

உணவகத்தின் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளனர்.

எனினும் உள்ளூர் நேரப்படி வியாழன் காலை 8:20 மணியளவில் நடந்த இந்த வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அனர்த்தத்தில் காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடிப்பு அருகிலிருந்த பல கட்டிடங்களின் ஜன்னல்களை உடைத்து, நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களையும் சேதமாக்கியது.

25 தீயணைப்பு வாகனஙகளும், 110 தீயணைப்பு வீரர்களும் மீட்பு நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஷென்யாங், லியோனிங் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

ஜூன் மாதத்தில் மத்திய சீனாவில் அமைந்துள்ள ஒரு சந்தையில் ஏற்பட்ட எரிவாயு சம்பந்தமான வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர் மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.