விவசாயிகளுக்கான உரமானியத்தை தொடர்ந்து வழங்குமாறும் நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்குமாறும் கோரி இன்று வெள்ளிக்கிழமை  அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆhப்பாட்டம் இடம்பெற்றது.

 

 கல்லோயா விவசாய ஒருங்கிணைப்பு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆப்பாட்டத்தில் மூவினங்களையும் சேர்ந்த நூற்றுக் கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நெற்செய்கை விவசாயிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த உரமானியத்தை  தொடர்ந்து அதே முறையில் வழங்குமாறும், நெல்லுக்கான உத்தரவாத விலையை தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டமைக்கு அமைய தொடர்ந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

 'காசு வேண்டாம். உரத்தைக் கொடு, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, விவசாயத்துறையை அபிவிருத்தி செய், விவசாயிகளுக்கான காப்புறுதியையும், விவசாயிகள் ஓய்வூதியத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடு' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  

இறுதியில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பிவணிக சிங்கவிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை விவசாயிகள் அமைப்பின் தலைவர் வழங்கி வைத்தார். 

இக்கோரிக்கைகள் அடங்கிய விடயம் பற்றி அராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட செயலாளர் இதன் போது தெரிவித்தார்.