(எம்.மனோசித்ரா)
வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமையின் கீழ் இதுவரையில் 92 128 கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 4 மாதங்களாக அறிகுறிகள் அற்ற தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கமைய இதுவரையில் 92 128 கொவிட் தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் அனைவரும் முற்றாக குணமடைந்துள்ளனர். தற்போது 3168 பேருக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இது இதுவரையில் வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்பட்ட மொத்த தொற்றாளர் எண்ணிக்கையில் 30 சதவீதமாகும். தற்போது நாடளாவிய ரீதியில் தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமைக்கு இணையாக வீடுகளில் சிகிச்சை பெறும் தொற்றாளர் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
இவ்வாறு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வந்தவர்களில் 1469 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது நூற்றுக்கு 1.4 சதவீதம் மாத்திரமேயாகும். சகலரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் இந்த நிலைமையை மேலும் கட்டுப்படுத்த முடியும் என்றார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM