நா.தனுஜா
ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரங்கள் இலங்கையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக ஆப்கானிஸ்தானின் நிலைவரங்கள் இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பில் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்று அஷ்ரப் ஹைதாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி 'ஆப்கானிஸ்தானில் போதைப்பொருட்கள் உற்பத்திசெய்யப்படுவதுடன் அவை பிராந்திய ரீதியில் இயங்கும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்களால் ஏனைய நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன.
இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய அரசாங்கங்களை வலுவிழக்கச்செய்யும் வகையிலான தீவிரவாத செயற்பாடுகளுக்கு நிதியளிக்கும் நோக்கிலேயே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே இவற்றால் இலங்கை உள்ளிட்ட கடலால் சூழப்பட்ட நாடுகளுக்கு நெருக்கடிகள் ஏற்படக்கூடும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸுடனான சந்திப்பின்போதே ஆப்கானிஸ்தான் தூதுவர் இவ்விடயங்கள் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.
அதேவேளை இஸ்லாமியக் குடியரசைப் புறக்கணிக்கின்ற, தோல்வியடைந்த 'டோஹா ஒப்பந்தம்' குறித்தும் இச்சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அஷ்ரப் ஹைதாரி, அவ்வொப்பந்தத்தின் தோல்வி உலகளாவிய ரீதியிலுள்ள தீவிரவாதக்குழுக்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு இலங்கையில் இடம்பெற்றுவந்த நீண்டகாலப்போர் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டமையை குறித்து அவர் தனது பாராட்டையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் போரிலிருந்து சமாதானத்திற்கு நிலைமாற்றமடைவது குறித்து தெற்காசியாவின் மிகப்பழமையான ஜனநாயக நாடான இலங்கையிடமிருந்து ஆப்கானிஸ்தான் பல்வேறு விடயங்களையும் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கின்றது என்றும் அஷ்ரப் ஹைதாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM