காசு, நகைகளை கப்பமாகப்‌ பெற்ற மாணவன் கைது

Published By: Digital Desk 3

20 Oct, 2021 | 01:50 PM
image

காசு மற்றும்‌ நகைகளைத்‌ தராவிட்டால்‌ பெற்‌றோரை வெட்டுவேன்‌ என்று மாணவன்‌ ஒருவரை அச்சுறுத்தி காசு, நகை என்பவற்றை கப்பமாகப்‌ பெற்றார்‌ என்ற குற்றச்சாட்டில்‌, அந்த மாணவனின்‌ நண்பன்‌ வட்டுக்கோட்டை பொலிஸாரால்‌ கைதுசெய்யப்பட்டார்‌.

நண்பன்‌, முகநூலில்‌ போலியான கணக்கு ஒன்‌றைத்திறந்து அந்த முகநூல்‌ மூலம்‌ 17வயதான அந்த மாணவனை அச்சுறுத்‌தியுள்ளார்‌.

இதற்கு பயந்த மாணவன்‌ குறித்த சந்‌தேகநபர்‌ கேட்ட பணத்தையும்‌ நகையையும்‌ அவர்‌ சொன்ன இடத்துக்குக்‌ கொண்டு சென்று வைத்துள்ளார். மாணவன் அந்த இடத்திலிருந்து சென்றபின்‌னா் சந்தேகநபர்‌ நகை, பணம்‌ என்பவற்றை எடுத்துச்சென்றார்‌.

இது தொடர்ந்து சிலநாட்கள்‌ நடைபெற்‌றுக்கொண்டிருந்தநிலையில்‌ நகைகளையும்‌ பணத்தையும்‌ தேடிய பெற்‌றோர்‌ அவற்றைக்‌ காணாது மகனிடம்‌ வினவினர்‌. உண்மையைமறைக்க முடியாத மாணவன்‌, நடந்தவற்றை பெற்றோரிடம்‌  கூறியுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர்‌ வட்டுக்‌கோட்டை பொலிஸ்‌ நிலையத்தில்‌ முறைப்பாடு பதிவு செய்தனர்‌. முறைப்‌பாட்டின்‌ அடிப்படையில்‌ விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார்‌ சந்தேகநபரை இன்று கைது செய்தனர்‌.

சந்தேகநபரிடம்‌ மேற்கொண்ட விசாரணையின்‌ அடிப்படையில்‌ 3 மோதிரங்‌கள்‌, 3 சங்கிலிகள்‌, 3 வளையல்கள்‌, ஒரு சோடி தோடு மற்றும்‌ 2 இலட்சத்து பத்தாயிரம்‌ ரூபா என்பவற்றை சந்தேகநபர்‌ கப்பமாக வாங்கியதை ஏற்றுக்‌கொண்டார்‌.

இந்தநிலையில்‌, குறித்த சந்தேகநபர்‌ வேறு மோசடிகளிலும்‌ஈடுபட்டாரா என்ற கோணத்தில்‌ பொலிஸார்‌ விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்‌.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09