எம்.மனோசித்ரா

மெதகம - பெல்லன் ஓயா பகுதியில் அமைந்துள்ள குளமொன்றில் நீராடிக் கொண்டிருந்த 3 சிறுவர்களில் ஒரு சிறுமி குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குளத்தில் மூழ்கிய சிறுமி பிரதேச மக்களால் மீட்க்கப்பட்டு  மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி 7 வயதுடைய கெந்தவின்ன , இத்தேகல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

மெதகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.