சிரியா தலைநகர் டமாஸ்கஸில் புதன்கிழமை அதிகாலையில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தினை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரு குண்டுத் தாக்குதல்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

Image

புதன்கிழமை காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலினால் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சிரிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

சிரிய அரசு தொலைக்காட்சி மத்திய டமாஸ்கஸில் எரிந்த பேருந்தின் காட்சிகளைக் வெளிக்காட்டியுள்ளது. பொது மக்கள் வேலை மற்றும் பாடசாலைக்கு செல்லும் பரபரப்பான நேரத்தில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

ஒரு காலத்தில் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட புறநகர்ப் பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றிய பிறகு, சமீபத்திய ஆண்டுகளில் டமாஸ்கஸில் இத்தகைய தாக்குதல்கள் அரிதானவையாக இடம்பெறுகிறது.

2011 மார்ச் மாதம் தொடங்கிய சிரியாவின் மோதலில் 350,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் வெளிநாடுகளில் அகதிகளாக உள்ள ஐந்து மில்லியன் மக்கள் உட்பட நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.