ஐக்கிய நாடுகள் சபையில் 71 அமர்வில் அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா நிகழ்த்திய இறுதி உரையில், உலக நாடுகளுக்கு இடையில் கூடுதலான அளவில் வெளிப்படைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில், உலக தலைவர்கள் முன் பேசிய ஒபாமா, உலகமயமாக்கலின் நலன்களை சமமாக பகிர்ந்து அமைக்கும் வரை , அடிப்படைவாதம் மற்றும் வெறுப்பு வளர இடம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகள், வர்த்தகத்தில் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வது, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்றார்.

மேலும், தங்களைச் சுற்றி பாதுகாப்பு அரண்களை அமைத்த நாடுகள், சிறையில் உள்ளதைப் போல் இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.