சிரிய தலைநகர் டமாஸ்கஸில் புதன்கிழமை காலை பேருந்தொன்று மீது வெடி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டமாஸ்கஸில் அமைந்துள்ள ஜனாதிபதி மேம்பாலத்தின் கீழ் பகுதியிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

வெடி விபத்துக்கு உள்ளான வாகனத்தை வெளிக்காட்டும் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.