முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் ஷகிப் ஆகியோரின் சிறந்த பந்துவீச்சு மூலம், டி-20 உலகக் கிண்ணத்தின் இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் ஓமனை செவ்வாய்க்கிழமை தோற்கடித்தது.

2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற ஆறாவது போட்டியின் தகுதிச் சுற்றில் பங்களாதேஷ் - ஒமான் அணிகள் மோதின.

இந்த ஆட்டம் நேற்றிரவு 7.30 மணிக்கு ஓமான் அல் அமரத் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக மொஹமட் நைம் 64 (50) ஓட்டங்களையும், ஷாகிப் அல் ஹசன் 42 (29) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் ஓமான் சார்பில் பிலால் கான் மற்றும் ஃபயாஸ் பட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கலீமுல்லா 2 விக்கெட்டுகளையும், ஜீஷன் மக்சூத் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்கள்.

154 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணியினரால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

ஜதிந்தர் சிங் 41 ஓட்டங்களையும், காஷ்யப் பிரஜாபதி 21 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

இதனால் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பங்களாஷே் சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பினை தக்க வைத்துள்ளது.

இதேவேளை பி பிரிவில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் பப்புவா நியூ கினியா ஸ்கெட்லாந்திடம் 17 ஓட்டங்களினால் தோல்வியடைந்து, சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பினை இழந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை எடுத்தது.

பெர்ரிங்டன் 70 ஓட்டங்களையும் கிராஸ் 45 ஓட்டங்களையும் அணி சார்பில் அதிகபட்சமாக எடுத்தனர்.

166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பப்புவா நியூ கினியா அணி களமிறங்கியது. அதிகபட்சமாக நார்மன் வனுவா 47 ஓட்டங்களை எடுத்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இறுதியில், 19.3 ஓவரில் பப்புவா நியூ கினியா அணி 148 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது.