'டஸ்கி பியூட்டி' நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

'ஜோக்கர்', 'அருவி', 'கைதி', 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பெயரிடப்படாத புதிய படத்தை தயாரிக்கிறார்கள். 

இதனை 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். 

இதில் கதையின் நாயகியாக, 'டஸ்கி பியூட்டி' ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவருடன் ஜித்தன் ரமேஷ், கிட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

கோகுல் பின்னால் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில், 

''கதைகளை தெரிவு செய்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் முற்றிலும் புதிய கதைக்களத்தில், மாறுபட்ட குணாதிசயம் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்குகிறது ''என்றார்.