ஆப்கானிஸ்தானின் நீண்டகால வளர்ச்சிக்கு பாலின சமத்துவம் அவசியம் - ஐக்கிய நாடுகள் சபை

Published By: Gayathri

20 Oct, 2021 | 08:09 AM
image

(ஏ.என்.ஐ)

ஆப்கானிஸ்தானின் நீண்டகால வளர்ச்சி மற்றும் நீடித்த அமைதிக்கு பாலின சமத்துவம் முக்கியமாகின்றது என  காபூலில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின்  பெண்கள் விவகாரம் தொடர்பான பிரதிநிதி அலிசன் டேவிடியன் தெரிவித்துள்ளார்.

எதிர்கால வளர்ச்சி, நீடித்த அமைதி மற்றும் ஆப்கானிஸ்தானில் துடிப்பான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு பாலின சமத்துவம்  முக்கியமாகின்றது.  

தலிபான்கள் நிர்வாகத்தில் அனைத்தும் ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  பெண்களுக்கான அமைச்சுக்கள் உட்பட அனைத்தும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.  

சில மாகாணங்களில் பெண்கள் வேலை செய்ய மற்றும் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை.

 

பெண்களின் உரிமைகளை ஆதரிப்பது மட்டுமல்லாமல், பெண்களில் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் ஐ.நா மிகவும் அவதானத்துடன் செயற்படுகின்றது.  

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டு மேம்பாட்டு உதவிகளில் ஒரு சதவீதம் என்பது கவலைக்குறியது.

கொவிட்-19 க்குப் பிறகு ஆப்கானிஸ்தான் உட்பட உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் மக்கள்தொகையில் பாதி பேருக்கு உதவி தேவைப்படுகிறது. மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு அவர்களின் அடுத்த உணவு எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை சமாளிக்க ஒரே வழி சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பெண்களின் முழு பங்களிப்பு அவசியமாகும்.

ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களைத் தவிர ஏனைய பெண்கள்  வேலைக்கு செல்ல முடிவதில்லை. 

பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இவை கவலைக்குறிய விடயங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33