ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டத்துக்கு எதிராக பெற்றோர்கள் சிலரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டமானது இன்று செவ்வாய்க்கிழமை (19) காலை பத்தரமுல்லை தியத்த உயன வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு எதிராக பெற்றோர்கள் சிலர் இவ்வாறு முதல் தடைவையாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு : ஜே.சுஜீவ குமார்