(எம்.மனோசித்ரா)
நாட்டில் பாரிய டொலர் நெருக்கடி காணப்படுகின்றபோதிலும் மக்களுக்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால் எந்தவொரு நிலைமையின் கீழும் பிரஜைகள் மீது அனைத்து சுமைகளையும் சுமத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது இதனைத் தெரிவித்த அவர்,
நுகர்வோர் மீது சுமையை சுமத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை.
உலகலாவிய ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடுகள்கூட கொவிட் தொற்றினால் நெருக்கடிகளுக்கு மத்தியில் கடும் நிபந்தனைகளுடனேயே ஆட்சியை முன்னெடுத்துச் செல்கின்றன.
இவ்வாறு அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை பிரஜைகள் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோன்று பிரஜைகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.
அதனடிப்படையில் நாட்டு பிரஜைகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை அரசாங்கம் நன்கு புரிந்துகொண்டுள்ளது.
நாட்டில் பாரிய டொலர் நெருக்கடி காணப்படுகின்றபோதிலும் மக்களுக்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால் எந்தவொரு நிலைமையின் கீழும் பிரஜைகள் மீது அனைத்து சுமைகளையும் சுமத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM