(க.கமலநாதன்)

அஸ்கிரிய பீடத்தின்  தேரருக்கு புதிய அரசிலமைப்பின் அவதானம் குறித்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச  விளக்கினார். அதனை ஏற்காத அஸ்கிரிய தேரர் ஜனாதிபதி, பிரதமர் மீது நம்பிக்கை உள்ளதாகவும் புதிய அரசிலமைப்பு ஆபத்தானதல்ல என்றும் தெரிவித்தார். ஆனால்  இன்னும் சில மாதங்களில் அவரின் நம்பிக்கை பொய்யாக போவதை எண்ணி வருந்துகின்றோம் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிலைப்பாட்டினை தெரிவித்த போது அஸ்கிரிய தேரர் அதற்கு மாற்று நிலைப்பாட்டினை தெரிவித்தார்.  அத்துடன் ஜனாதிபதி  மற்றும் பிரதமர் மீது அதீத நம்பிக்கை உள்ளதாகவும்  குறிப்பிட்டார்.  

அதனை நாங்கள் ஏற்றுகொண்டாலும் இன்னும் சில மாதங்களில் அஸ்கிரிய தேரரின் நம்பிக்கை பொய்யா க போகின்றமை மற்றும் அவரின் நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளமையினை எண்ணி வருந்துகின்றோம் என்றார்.