(எம்.மனோசித்ரா)

இந்திய பிரதமர் நரந்திர மோடி தலைமையில் நாளை இந்தியாவின் - குஷிநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கான நேரடி விமான சேவையின் அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் , பௌத்த பிக்குகள் அடங்கிய குழு நாளை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான மெய்நிகர் மாநாட்டில் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

அதற்கமைய அமைச்சர் நாமல் ராஜபக்ஷ , இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 பௌத்த மத குருமார்கள் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தல் , பௌத்த யாத்திரைகளை ஊக்குவித்தல் என்பன இதன் நோக்கமாகும். இலங்கையிலிருந்து செல்லும் தூதுக்குழுவினர் இந்தியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் வாரநாசிக்கு விஜயம் செல்லவுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.