ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவரவே பாடசாலைகளை திறப்பதில் அரசாங்கம் ஆர்வம் - ரோஹினி

Published By: Digital Desk 4

19 Oct, 2021 | 09:30 PM
image

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் - 19 தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில், முதற்கட்டமாக ஆரம்ப மற்றும் கனிஷ்ட பாடசாலைகளை மீளத்திறப்பதற்கே அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

எனவே அவற்றில் கல்விபயிலக்கூடிய 12 வயதிற்குக் குறைந்த மாணவர்களைக் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி மேற்குறிப்பிட்டவாறு பாடசாலைகளைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மாணவர்களின் நலனை முன்னிறுத்தியது அல்ல.

மாறாக ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முடிவிற்குக்கொண்டுவருவதற்காகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

தமது நலன்களை உறுதிசெய்துகொள்வதற்காக எந்தவொரு தரப்பினரையும் பலிகொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் செவ்வாய்கிழமை ( 19 ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்குத் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் முதற்கட்டமாக 200 இற்கும் குறைவான மாணவர்களைக்கொண்ட சுமார் 3800 பாடசாலைகளை மாத்திரமே 21 ஆம் திகதி மீளத்திறக்கவிருப்பதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இவற்றில் பெரும்பாலானவை ஆரம்பப்பிரிவு மற்றும் கனிஷ்ட பாடசாலைகளாகும். எனவே அவற்றில் கல்விகற்பவர்கள் 12 வயதிற்கும் குறைந்த மாணவர்களேயாவர்.

கொவிட் - 19 வைரஸ் தொற்றிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? முதற்கட்டமாகப் பாடசாலைகளைத் திறப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல.

மாறாக ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முடிவிற்குக்கொண்டுவருவதற்காகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

அரசாங்கம் அதன் நலன்களை உறுதிசெய்துகொள்வதற்காக எந்தவொரு தரப்பினரையும் பலிகொடுப்பதற்குத் தயாராக இருப்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எந்தவொரு வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகவில்லை –...

2026-08-14 09:06:01
news-image

இன்றைய வானிலை 

2026-08-14 06:42:08
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31
news-image

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை...

2026-08-14 06:24:31
news-image

மெகசின் சிறை வன்முறையில் திட்டமிட்ட தாக்குதல்;...

2026-08-14 06:20:00
news-image

ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம்...

2026-08-14 06:12:16
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தை பிரதம நீதியரசர்...

2026-08-14 06:07:43
news-image

எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது...

2026-08-14 06:04:13
news-image

'நீதியின் ஓலம் - 2': தமிழினப்படுகொலைக்கு...

2026-08-14 05:57:08
news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உபகுழுவின்...

2026-08-14 05:54:23