நாட்டில் எவ்வித மத பாகுபாடுகளும் இல்லை - உறுதியாக கூறுகிறது அரசாங்கம்

Published By: Digital Desk 4

19 Oct, 2021 | 09:23 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் அனைத்து இன மக்களும் பாதுகாப்புடன் வாழக் கூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

அதில் எவ்வித இன மத பாகுபாடுகளும் இல்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

Articles Tagged Under: ரமேஷ் பத்திரண | Virakesari.lk

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் செவ்வாய்கிழமை (19 )  நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் கேட்கப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,

இலங்கையில் அனைத்து இன மக்களும் பாதுகாப்புடன் வாழக் கூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் , சிங்கள மற்றும் முஸ்லிம் என அனைத்து இன மக்களும் கௌரவத்துடன் வாழக் கூடிய நிலைமையும் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் துரதிஷ்டவசமாக கடந்த 2019 ஆம் ஆண்டு எதிர்பாராத சம்பவங்கள் இடம்பெற்றன.

எனினும் அந்த சந்தர்ப்பத்திலும் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

அதே போன்று அனைத்து இன மக்களும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழக் கூடிய சூழல் தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேரளா கஞ்சாவினை கட்டிலின் கீழ் பதுக்கியவர்...

2025-02-11 00:40:52
news-image

அவசர மின் தடை தொடர்பிலும் மதிப்பாய்வு...

2025-02-10 14:17:12
news-image

இன, மத சகவாழ்வுக்கு பாதிப்பு ஏற்படும்...

2025-02-10 17:47:02
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து மீண்டும்...

2025-02-10 17:40:48
news-image

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி...

2025-02-10 14:19:45
news-image

பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு பதிலாக குரங்குகள் தான்...

2025-02-10 17:42:24
news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14