சுகாதார அமைச்சரை வலுவிழக்கச்செய்து அதிகாரங்களைக் கைப்பற்ற சதி முயற்சி : பல அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்தினார் ரவி குமுதேஷ் 

Published By: Digital Desk 4

19 Oct, 2021 | 09:20 PM
image

(நா.தனுஜா)

சுகாதார அமைச்சருக்கும் அரச மருந்தாக்கக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகப் பணிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளின் விளைவாக அவர்கள் அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஏன் கொவிட் தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்தவில்லை : நாடகமாடுகிறது அரசாங்கம் - ரவி  குமுதேஷ் | Virakesari.lk

இதனூடாக முன்னாள் சுகாதார அமைச்சரைப்போன்று தற்போதைய சுகாதார அமைச்சரையும் வலுவிழக்கச்செய்து, சுகாதார அமைச்சின் வீழ்ச்சிக்கான பொறுப்பை அவர் மீது சுமத்தி, அனைத்து அதிகாரங்களையும் குறித்தவொரு குழுவினர் தம்வசப்படுத்திக்கொள்ள முற்படுகின்றனர் என்று  என்று மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில்வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் செவ்வாய்கிழமை ( 19 ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

சுகாதார அமைச்சருக்கும் அரச மருந்தாக்கக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகப் பணிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளின் விளைவாக அவர்கள் அப்பதவியிலிருந்து இராஜரினாமா செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இவ்வாறு அமைச்சருடன் அமைச்சின் அதிகாரிகள் கருத்து முரண்பாடுகளில் ஈடுபடுவதென்பது சாதாரண விடயமல்ல. இது தற்போது சுகாதார அமைச்சிற்குள் நிலவும் குழப்பகரமான சூழ்நிலையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

ஏற்கனவே பவித்ரா வன்னியாராச்சி சுகாதார அமைச்சராகப் பதவிவகித்தபோது அவர் வெறும் பொம்மையாகவே செயற்படுகின்றார் என்று நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

அமைச்சின் ஏனைய அதிகாரிகள் அமைச்சரை விடவும் வலுவான அதிகாரங்களை வெளிப்படுத்தியமையே இதற்குக் காரணமாகும்.

இருப்பினும் 'நான் பொம்மையாகவே இருக்கின்றேன்' என்று பதிலளித்த முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இறுதியில் தோல்வியடைந்தார். அத்தகைய நிலைக்கு வழிகோலும் வகையிலான செயற்பாடாகவே மேற்கூறப்பட்ட கருத்து முரண்பாடுகளை நோக்கவேண்டியுள்ளது. 

இராஜாங்க அமைச்சினதும் அரச மருந்தாக்கக்கூட்டுத்தாபனத்தினதும் முக்கியஸ்தர்கள் பலரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

எனவே தற்போது சுகாதார அமைச்சருக்கு எதிராகக் கருத்து முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதன் ஊடாக, வெகுவிரைவில் ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையீடுசெய்து அமைச்சரை வாயடைக்கச்செய்வார் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

நாட்டுமக்களால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளே அமைச்சுப்பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றார்கள். எனவே அவர்களுக்குரிய அதிகாரங்களை விடவும் மேலோங்கிய அதிகாரங்களை அமைச்சின் ஏனைய அதிகாரிகளுக்கு வழங்குவதென்பது சட்டத்திற்குப் புறம்பானதாகும்.

இருப்பினும் சுகாதார அமைச்சரை கருத்திலெடுக்காமல் சுகாதார அமைச்சின் ஏனைய அதிகாரிகள் இயங்குவதென்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். எனவே மேற்கூறப்பட்டவாறு பதவியிலிருந்து விலக விரும்புபவர்கள் இராஜினாமா செய்யமுடியும். 

மாறாக முன்னாள் சுகாதார அமைச்சரைப்போன்று தற்போதைய சுகாதார அமைச்சரையும் வலுவிழக்கச்செய்து, சுகாதார அமைச்சின் வீழ்ச்சிக்கான பொறுப்பை அவர்மீது சுமத்தி, அனைத்து அதிகாரங்களையும் குறித்தவொரு குழுவினர் கைப்பற்றிக்கொள்ள முற்படுவதென்பது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

எனவே இதுகுறித்து ஜனாதிபதி விசேட அவதானம் செலுத்தவேண்டும். நாட்டில் முதற்தடவையாக சுகாதாரத்துறைக்கென இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்ட போதிலும் அதன் பணிகள் உரியவாறு முன்னெடுக்கப்படவில்லை. இவை சுகாதார அமைச்சின் வருங்கால செயற்பாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09