(லியோ நிரோஷ தர்ஷன்)

உகண்டாவில் போன்று இலங்கையிலும் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறும் அளவிற்கு ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் மனநிலை மாற்றமடைந்துள்ளது என  முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்  தெரிவித்தார்.  

பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே    பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்  மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனை கடந்த ஆட்சியில் நாங்களும் சந்தித்து கலந்துரையாடினோம். ஆனால் அவர் ஒரு முறைகூட உகண்டாவை போன்று இலங்கையிலும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என கூறவில்லை. ஆனால் இன்று அவர் இலங்கையை உகண்டாவுடன் ஒப்பிடுகின்றார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவரது மன நிலையும் மாறிவிட்டது என்றார்.