எஸ்.ஜே. பிரசாத்

கொழும்பு நகர மண்டப பிர‍தேசத்தின் டி சொய்சா மருத்துவ சதுக்கத்தில் உள்ள விக்டோரியா  ஞாபகார்த்த கண் மருத்துவமனையின் கண்கவர் நிறம் மற்றும்அமைப்பு கொழும்பு  நகரத்தில் ஒரு தெளிவான அ‍டையாளமாக இன்றும் இருக்கின்றது.

அதன் வரலாறு, நோக்கம் மற்றும் அதன் குறிப்பிடத்தக்க தோற்றத்தைகண்டு ஒரு கணம் இடைநிறுத்துவதன் மூலம் பார்ப்பவர்களுக்கு அது ஒரு சிறு ஆச்சர்யத்‍தையும்தந்துவிடுகின்றது என்ப‍தை மறுக்க முடியாது.

இது உண்மையில் கொழும்பு தேசிய மருத்துவமனையின் ஒரு பகுதிஎன்பது பலருக்கு தெரியாது. மேலும் இது பூச்சிகள் மற்றும் இரவு நேர உயிரினங்கள்மட்டுமே உள்ள ஒரு கைவிடப்பட்ட அமைப்பு என்ற தவறான எண்ணத்தில் பலரும் உள்ளனர். 

கட்டிடத்தின் மேல் பகுதியில் ‘1903 விக்டோரியா மெமோரியல்’என்ற எழுத்துக்கள் ‍பொறிக்கப்பட்ட வாசகம் உள்ளது. முக்கிய நுழைவாயிலில் 1903 ஆகஸ்ட் 6 ஆம் திகதியன்று லேடிரிட்ஜ்வே அடிக்கல் நாட்டப்பட்டதைக் குறிக்கும் ஒரு தகடும் உள்ளது.

பொதுவாக கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு சிறந்த பரோபகாரர்சார்லஸ் ஹென்றி டி சொய்ஸா நிதியளித்ததாகவும் பின்னர் மருத்துவமனைக்கு இந்தக் கட்டிடத்தை நன்கொடையாக வழங்கினார் என்று நம்பப்படுகிறது. ஹென்றி டி ‍சொய்சாவின் சி‍லை கட்டிடத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிவப்பு செங்கல் காலனித்துவ கட்டிடம் இந்தோ-சரசெனிக்பாணியில் அ‍மைக்கப்பட்டுள்ளது. இது கொழும்பைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் எட்வர்ட் ஸ்கின்னரால்வடிவமைக்கப்பட்டது.

மேலும் அவர் பக்கிங்ஹாம் அரண்மனையின் சீரமைப்பில் ஈடுபட்டகட்டிடக் கலைஞர்களில் ஒருவர் என்று நம்பப்படுகிறது. ஆனாலும், இந்த தரவுகள் சற்று முன்னுக்குப் பின் முரணான தகவல்க‍ளைதருகின்றது என்பதும் இங்‍கே குறிப்பிட்டாக‍வேண்டும்.

நன்‍கொ‍டையாக வழங்கியவராக கூறப்படும் டி சொய்ஸா இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 1897ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணியின் வைர விழாவை நினைவுகூரும் வகையில் கண் மருத்துவமனைகட்டப்பட்டதாம். மறுபுறம், 1903 இல் அடிக்கல் நாட்டப்பட்டது என்று அந்த தகடுகூறுகிறது.

கட்டிடம் செவ்வக வடிவத்தில் ஒவ்வொரு மூலையிலும் ஒரு குவிமாடம்கொண்ட கோபுரம் உள்ளது.  ஒரு சிறிய மத்தியகுவிமாடம் அதன் பெயர்ப் பலகைக்கு சற்று மேலே காணப்படுகிறது.

கட்டிடத்தின் தரை தளத்தில் முன் மண்டபம் உள்ளது. வராண்டாகட்டிடத்தை சுற்றி ஓடுகிறது. இரண்டாவது மாடிக்கு ஏறும்போது, பார்வையாளருக்குகட்டிடத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இருந்து ‍கொழும்பு நகரின் காட்சிக‍ளைக்காணலாம். முன் காட்சி கொள்ளுப்பிட்டி நோக்கி ஓடும் பிரதான சாலையின்காட்சியை வழங்குகிறது.

குவிமாடங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. இரண்டாவது மாடியில்,ஒவ்வொரு குவிமாடத்தின் உள்ளே ஒரு கழிப்பறை உள்ளது.

பழங்கால பாணியில் ஓடுபோடப்பட்டுள்ளது, ஆனால் மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. அந்த கழிப்பறை கதவுகளுக்குப் பின்னால் தரை தளத்திற்குச்செல்லும் சுழல் படிக்கட்டுகள் உள்ளன.

படிக்கட்டுகள் துருப்பிடித்து மூடப்பட்டிருக்கும் மற்றும்பல வருடங்கள் பயன்படுத்தப்படாத தூசி படிந்துள்ளன. இருப்பினும், படிகளை ஆதரிக்கும் இரும்பு ஓடுகள் முற்றிலும் அப்படியே இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. நான்கு குவிமாடங்களில்இரண்டு அத்தகைய படிக்கட்டுகளை மறைக்கின்றன.

ஆனால் அவை இனி பயன்படுத்தப்படுவதில்லை. கட்டிடத்தின் முன் நுழைவாயிலும் இனி பயன்படுத்தப்படாது. அதற்கு பதிலாக, பார்வையாளர்கள் கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ள எலும்பியல் பிரிவிலிருந்து நுழைந்து முன்பக்கத்தை நோக்கி செல்ல வேண்டும். பல பெரிய மரங்கள் முன் தாழ்வாரத்தை மூடி, அருகில் குளிர்ந்தநிழலை வழங்குகிறது. ‍நெரிசல் மிக்க நகரம் மட்டுமே முன்னால் உள்ளது.

இருப்பினும், வெப்பநிலை வேறுபாடு ஆச்சரியமாக இருக்கிறது.‍வோர்ட் பிளேஸ் மற்றும் ஈ.டபிள்யூ பெரேரா மாவத்தை நோக்கி செல்லும் இரண்டு பூட்டப்பட்டகதவுகளும் கடந்த காலத்தின் அறிகுறிகளை வெளிப்படுத்து கின்றன.

1991 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச இந்த கட்டிடத்தைபாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்தார். கட்டிடத்தின் பார்வையை தடுக்கும் வகையில்எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவது சட்டத்தை மீறுவதாகும்.

தேசிய மருத்துவமனைக்கு வருபவர்களின் பயன்பாட்டிற்காகஈ.டபிள்யூ பெரேரா மாவத்தை முழுவதும் கட்டப்பட்ட ஒரு மேல்நிலை பாலம் விக்டோரியாநினைவிடத்திற்கு இடையூறாக இருந்ததால் இடிக்கப்பட்டதாம்.

கட்டிடத்தின் உள்ளே, அறுவை சிகிச்சை நடவடிக்கைகளில் மிகவும்பரபரப்பாக இருந்தாலும், கட்டிடத்தின் வெளிப்புறம் சிதைவு மற்றும் பாழடைவதைத்தவிர வேறு எதையும் காட்டவில்லை. அந்த கட்டிடம் 1997இல் அப்போதைய சுகாதார அமைச்சரால் புதுப்பிக்கப்பட்டதைக்குறிக்கும் ஒரு தகடு உள்ளது.

கவனமின்மை கட்டிடத்திற்குள் புகுந்து, அதன் தனித்துவமானகட்டிடக்கலை வடிவமைப்பை அழித்துக்‍கொண்டிருக்கிறது. உச்சவரம்பு இடிந்து விழும் நிலையில் உள்ளது. அருகிலுள்ள பூனைகளும் நாய்களும் இந்தக் கட்டத்தின் வராண்டாக்க‍ைளைதங்கள் வீடாக மாற்றியுள்ளன.

வளாகத்திற்கு வெளியே தெரு விற்பனையாளர்கள் ஒரு கூட்டம்,அவர்கள் தங்கள் சிறிய க‍டைக‍ளை  அமைத்து, கட்டிடத்தின்இரும்பு வேலியை ஆதரவாக பயன்படுத்தி வருகின்றது. விக்டோரியா ஞாபகார்த்த கட்டடமானது ஒரு தனித்துவமான அமைப்பு.கட்டிடம் மற்றும் அதன் கட்டிடக்கலை நாட்டின் வரலாற்றில் ஒரு கடந்த காலத்தை குறிக்கிறது.

காலனியங்கள் நீண்ட காலமாகிவிட்ட போதிலும், இந்த குறிப்பிடத்தக்கநினைவுச்சின்னம் சிதைந்து போகக்கூடாது, ஏனெனில் இது கொழும்பின் அடையாளத்தின் ஒரு பகுதியாகும்.