எம்.நியூட்டன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ். போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணருமாகிய வைத்தியக் கலாநிதி சி.ராஜேந்திரா எழுதிய "யாழ்ப்பாணத்தில் சத்திர சிகிச்சை" என்ற நூலின் வெளியீட்டு விழா திங்கட்கிழமை  சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா கலந்து கொண்டார்.

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி நூலை வெளியிட்டு வைத்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எஸ். ஸ்ரீ தரன், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி வி. சுதர்சன், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி மருத்துவர் இ.சுரேந்திரகுமாரன், மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், சத்திர சிகிச்சை நிபுணருமாகிய வைத்தியக் கலாநிதி எஸ். ரவிராஜ், முன்னாள் துணைவேந்தரும், மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினருமாகிய பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மற்றும் போதனா வைத்திய சாலையைச் சேர்ந்த வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.