23 வயதுக்குபட்ட ஆசிய கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டி : இலங்கை குழாம் அறிவிப்பு

Published By: Gayathri

19 Oct, 2021 | 01:31 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

23 வயதுக்குட்டபட்ட ஆசிய கால்பந்தாட்ட கிண்ண தகுதிகாண் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கால்பந்தாட்ட குழாம் விபரத்தை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ளது. 

கட்டாரில் எதிர்வரும் 22 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ள 23 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட கிண்ண தகுதிகாண் போட்டியில் கட்டார், சிரியா, யேமன் ஆகிய நாடுகளுடன் இலங்கையும் குழு A யில் அங்கம் வகிக்கிறது. 

கட்டாரில் கால்பந்தாட்ட பயிற்சிகளை பெறுவதற்காக 33 பேர் கொண்ட 23 வயதுக்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட குழாம் ஏற்கனவே அங்கு சென்றிருந்ததுடன், அங்கு பெற்ற பயிற்சிப் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே, இந்த 23 பேர் கொண்ட இலங்கை குழாத்தை தெரிவு செய்தாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இலங்கை 23 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட உத்தேச குழாத்தில் சசங்க தில்ஹார, அசேல மதுஷான், சத்துரங்க லக்சான், டேனியல் மெக்ராத் கோமஸ், கிஹான் சத்துரங்க, மொஹமட் குர்ஷீத், மொஹமட் முர்ஷீத், மொஹமட் முஸ்பிர், பெத்தும் விமுக்தி, ராசா ரூமி, ரிப்கான் மொஹமட், அப்துல் பாசித், சபீர் ரசூனியா, செனால் சந்தேஷ், ஷிஷான் பிரபுத்த, கண்ணன் தனுஷன், யுவராசா தேனுஷன், பதுர்டீன் தஸ்லீம், உதயங்க பெரேரா, விக்கும், ருமெஷ் மெண்டிஸ், மொஹமட் அமான், நுவன் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்த மொஹமட் அமானுல்லாஹ் 23 வயதுக்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணியின் தலைமை பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

உதவி பயிற்றுநராக மொஹமட் ஜெஸ்மின், கோல்காப்பு பயிற்றுநராக சமன் தயாவன்ச, உடற் பயிற்சி பயிற்றுநராக பிரேஸில் நாட்டின் மார்கொஸ் பெரேய்ரா ஆகியோர் செயற்படவுள்ளனர்.

இந்த தகுதிகாண் போட்டித் தொடரில் மொத்தமாக 42 அணிகள் 10 குழுக்களில் போட்டியிடுகின்றன. குழு K யில் இடம்பெற்றிருந்த வட கொரியா போட்டித் தொடரிலிருந்து விலகிக்கொண்டதையடுத்து 41 நாடுகளின் அணிகளே பங்கேற்கின்றன. 

இந்த 11 குழுக்களும் அந்தந்த குழுக்களுக்கு  வழங்கப்பட்டுள்ள நாடுகளில் விளையாடவுள்ளன.

அதாவது குழு A கட்டாரிலும், குழு B மற்றும் குழு  G தஜிகிஸ்தானினும், குழு C பஹ்ரேனிலும், குழு D குவைட்டிலும், குழு E ஐக்கிய அரபு இராச்சியத்திலும், குழு Fஜோர்தானிலும், குழு H சிங்கப்பூரிலும், குழு I கிர்கிஸ்தானிலும், குழு J மொங்கோலியாவிலும், குழு K ஜப்பானிலும் விளையாடவுள்ளன. 

இதன்படி A குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை, சிரியா, கட்டார், யேமன் என்பன கட்டாரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35