திருக்கோவில் காயத்திரி கிராமத்தில்  துப்பாக்கியுடன் ஒருவரை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர் 

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காயத்திரி கிராமம் நான்காம் பிரிவு   வீதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பொலிசார் சுற்றிவளைத்து மேற்கொண்ட தேடுதலில் வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்வத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,

சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்;றனர்.