(எம்.மனோசித்ரா)

தேர்தல் முறைமைகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும். எவ்வாறிருப்பினும் இந்த ஆண்டில் தேர்தல் முறைமைகளில் மாற்றங்களை மேற்கொள்வது சாத்தியமற்றது.

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான இந்தியாவின் கடன் திட்டத்திற்கும் மாகாணசபைத் தேர்தல்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்தார்.