வடகொரியா நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணையை ஜப்பான் கடற்பரப்பில் ஏவிப் பரிசோதித்துள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10:17 மணிக்கு (01:17 GMT) வடகொரியாவின் சின்போவுக்கு அருகில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டது என்று தென் கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் தற்போது ஏவுகணை சோதனை பற்றிய கூடுதல் விவரங்கள் குறித்து முழுமையான பகுப்பாய்வை நடத்தி வருகின்றனர் என்று தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

சமீபத்திய வாரங்களில் வடகொரியா ஹைப்பர்சோனிக் மற்றும் கண்டம் விட்டு கண்டம் செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளல் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்த சோதனைகளில் சில கடுமையான சர்வதேச தடைகளை மீறுகின்றன.

ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வடகொரியா சோதனை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை தடைவிதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.