சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு சிலுவைப்போர் மாவீரருக்கு சொந்தமானதாகக் கருதப்படும் வாள் ஒன்று இஸ்ரேலின் வடக்கு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடல்வாழ் உயிரினங்களால் கவரப்பட்டள்ள வாள் மணல் மாற்றத்திற்குப் பிறகு வெளி வந்ததாக கருதப்படுகிறது.

"முறையான நிலையில் பாதுகாக்கப்பட்டுள்ள வாள், ஒரு அழகான மற்றும் அரிய கண்டுபிடிப்பாகும் மற்றும் சிலுவைப்போர் மாவீரருக்கு சொந்தமானது" என்று இஸ்ரேல் தொல்பொருள் ஆணையகம் கூறியுள்ளது.

இது ஒரு மீட்டர் நீளமுள்ள பிளேட் மற்றும் 30 சென்டிமீட்டர் ஹில்ட் கொண்டது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.