யாழில் நாதஸ்வர கலைஞன் குமரனுக்கு கௌரவிப்பு

Published By: Digital Desk 2

19 Oct, 2021 | 10:32 AM
image

சிவா இயக்கத்தில் இமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 168 ஆவது தமிழ் திரைப்படமான அண்ணாத்தா படத்தின் பாடல் இசையமைப்பில் யாழ் மண்ணில் இருந்து சென்று நாதஸ்வர இசை வழங்கிய யாழ் மண்ணின் புகழ் பூத்த நாதஸ்வர கலைஞன் கே. பி.குமரனுக்கு யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பாராட்டு விழா இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் கலந்து கொண்டு நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு வாழ்த்துரையும் வழங்கி வைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்