உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்திற்கு 'நெஞ்சுக்கு நீதி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

'கனா' என்ற படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நெஞ்சுக்கு நீதி'  இந்தப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். 

இவர்களுடன் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர், மயில்சாமி, சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, 'ராட்சசன்' சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, திபு நினன் தோமஸ் இசையமைக்கிறார்.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்தப் படத்திற்கு தற்போது 'நெஞ்சுக்கு நீதி' என பெயரிடப்பட்டு அதன் மோசன் போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஹிந்தியில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற 'ஆர்ட்டிகிள் 15' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் பார்வையாளர்களால் இரசிக்கப்பட்டு வருவதால் இணையத்தில் வைரலாகி வருகிறது.