பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று (20) இன்று இடம்பெற்றுள்ளது.

ஆஸி அணியுடனான டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் பிரதமர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, செயலாளர் மொஹான் டி சில்வா, தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பாடசாலை மட்டத்திலான கிரிக்கெட் விரர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.