(எம்.மனோசித்ரா)

 

பிரதேச செயலங்களில் பயிற்சி பெற்று வரும் பட்டதாரிகள் ஊடாக கற்பித்தலை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்த கல்வி சார் ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் வசந்த தர்மசிறி , இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் அது நாட்டின் துரதிஷ்டமாகும் என்றும் குறிப்பிட்டார்.

திங்கட்கிழமை (18)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்குவதற்கு பதிலாக அரசாங்கம் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கிறது. அதற்கமைய பிரதேச செயலங்களில் பயிற்சி பெற்று வரும் பட்டதாரிகள் ஊடாக கற்பித்தலை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு விசேட பயிற்சியும் அனுபவமும் பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களால் மாத்திரமே மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்க முடியும். அதனை விடுத்து பிரதேச செயலகங்களில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் பட்டதாரிகளை கற்பத்திலில் இணைத்துக் கொண்டால் அது நாட்டின் துரதிஷ்டமாகும் என்றார்.