நுவான் குலசேகரவின்  வாகனம் மோதி நேற்று (19) அரவிந்த என்ற 28 வயதான இளைஞர் ஒருவர்  உயிரிழந்தார்.

விபத்து சம்பவம் தொடர்பில்  நுவான் குலசேகரவும் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குலசேகரவும், உயிரிழந்த அரவிந்த என்பவரும் ஏற்கனவே பழக்கமானவர்கள் என தற்போது புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை அரவிந்தவின் உறவினர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், தான் அரவிந்தவின் உறவினர் என்று குறிப்பிட்டுள்ளதோடு, குலசேகரவும், அரவிந்தவும் ரன்பொகுனகமவில் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

குலசேகர நிட்டம்புவ ரன்பொகுனகம பகுதியைச் சேர்ந்தவரென்பதோடு, ரன்பொகுனகம மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார்.

 இந்நிலையில் அவர் வீட்டுக்கு சென்று திரும்பிய போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.