(எம்.மனோசித்ரா)

ஹாலிஎல மற்றும் உவாபரணகம தொகுதிகளை இணைக்கும் உமா ஓயா மீது ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட இரும்பு பாலத்தின் பாழடைந்த நிலையை கண்காணிப்பதற்காக சென்ற பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, பலகை உடைந்து பாலத்தில் விழுந்தார்.

Gallery

எனினும் சம்பவ இடத்திலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் அவர் பாலத்திலிருந்து கீழே விழாமல் பாதுகாக்கப்பட்டார்.

Gallery

113 மீட்டர் நீளமுள்ள குறித்த பாலம் நீண்ட காலமாக சிதைந்து காணப்படுவதால் அங்குள்ள மக்கள் தமது விளைபொருட்களை எடுத்துச் செல்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

Gallery

தற்போது ஆட்சியாளர்களே இந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளதால் விரைவில் குறித்த பாலம் புனரமைத்துக் கொடுக்கப்படும் என்று அங்குள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர்.