விவேகானந்த சபையின் 119 ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நாளைய தினம் காலை 10 மணிக்கு சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி இக்கூட்டத்தை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கொவிட் - 19 வைரஸ் பரவலையடுத்து அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரங்குச்சட்டத்தின் காரணமாக அது பிற்போடப்பட்டது.

இந்நிலையில் நாளைய தினம் நடைபெறவிருக்கும் கூட்டத்தின்போது 118 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்ட அறிக்கை மற்றும் 2020 - 2021 ஆம் ஆண்டிற்குரிய முகாமைச்சபையின் அறிக்கை, கணக்காய்வு அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்படும்.

அதேவேளை சபை அமைப்பு விதி 16 (3) ஆம் பிரமாணப்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற முகாமைச்சபைக்கூட்டத்தில் ஓய்வுபெறும் முகாமைச்சபையினரால் புதிய பதவிகளுக்கான பெயர்களும் குறித்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.