சுபத்ரா

சாலியபுரவில் உள்ள கஜபா படைப்பிரிவின் தலைமையகத்தில் இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களில் பங்கேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அங்கு வெளிப்படுத்திய கருத்துக்களும், திரை நீக்கம் செய்து வைத்த நினைவுக் கல்வெட்டுகளும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

அங்கு உரையாற்றிய போது,  சமிக்ஞைப் படைப்பிரிவில் சேர்ந்து, பின்னர் சிங்கப்படைப்பிரிவில் இணைந்து, ரஜரட்ட ரைபிள்ஸ் படைப்பிரிவை உருவாக்கிய போது அதில் இணைந்து, பின்னர் அந்தப் படைப்பிரிவு கஜபா படைப்பிரிவாக மாற்றப்பட்டு அதன் பற்றாலியன் கட்டளை அதிகாரியாக பதவி வகித்தது வரையான- 20வருட இராணுவ சேவையையும், பின்னர் 10 வருட பாதுகாப்பு செயலாளர் பதவியையும் அவர் நினைவு கூர்ந்திருக்கிறார்.

இலங்கையில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர், நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் முதல் சந்தர்ப்பம் இது.

அரசியல்வாதியாக இல்லாமல், நாட்டின் தலைவராகி, முப்படைகளினதும் தளபதியாக பதவி வகிப்பது குறித்து பெருமை அடைவதாக குறிப்பிட்டிருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

நாட்டுக்காக ஆற்றிய பணியின் காரணமாகவே மக்கள் தன்னை நம்பி நாட்டை ஒப்படைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அரசியல்வாதிகள் மட்டும் தான், நாட்டின் தலைவராக வரமுடியும் என்றில்லை. இராணுவ அதிகாரிகளால் கூட வர முடியும் என்பதை மறைமுகமாக ஜனாதிபதி வெளிப்படுத்தியிருக்கிறார்.

தாம் சிறந்த பணியாற்றியதன் மூலமாக மக்களால் தெரிவு செய்யப்பட்டதை அவர் நினைவுபடுத்தியிருந்தாலும், எல்லா இராணுவத்தினரும் அவ்வாறு எடுத்துக் கொண்டிருப்பார்கள் என்றில்லை.

இராணுவத்தினரால், ஆட்சியை பிடிக்கலாம் என்ற கோணத்தில் சிந்திப்பவர்களும் இருக்கக் கூடும்.

இராணுவ அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட்டு, அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் அங்கு குறிப்பிட்டிருந்தார் ஜனாதிபதி.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-17#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.