என்.கண்ணன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களிடம் கொண்டு செல்கின்ற பணியில் தமிழ் அரசியல் தலைமைகள் எதனைச் சாதித்திருக்கின்றனஎன்ற கேள்வி, பரவலாகவே காணப்படுகிறது.

2009 போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையில் இருந்து அரசியல் நடத்துகின்ற அனைவருமே, பிரிவினைவாதத்தை நிராகரிக்கிறார்கள்.

தனிநாடு அமைப்பது பற்றி அவர்கள் தப்பித் தவறியும் பேசுவதில்லை. 

அவ்வாறு பேசுவது அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல் என்பதுடன், ஆறாவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, உறுதிமொழி ஒன்றையும் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கைத் தீவுக்குள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழுகின்ற ஒரு தீர்வு தான் இறுதியானது என்பது, விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னர் உறுதியாகி விட்டது.

அது சமஷ்டியா, ஒற்றையாட்சியா அல்லது வேறொரு பெயர் கொண்டதா என்பதும், அந்த முறைமைக்கு இருதரப்பும் இணங்கிக் கொள்வதும் தான் தற்போதுள்ள பிரச்சினை.

சமஷ்டித் தீர்வை சிங்களவர்கள் எதிர்க்கிறார்கள்.தமிழர்கள் விரும்புகிறார்கள்.

ஒற்றையாட்சியைசிங்களவர்கள் வலியுறுத்துகிறார்கள். தமிழர்கள் நிராகரிக்கிறார்கள்.

இந்த துருவநிலைக்கு மத்தியில் ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற பெயர்கள் இல்லாத ஒரு முறைமையை அறிமுகப்படுத்தலாம் என்று கூட, சில காலத்துக்கு முன்னர் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் பேசப்பட்டது.

பெயர் முக்கியமல்ல, கட்டமைப்பு தான் முக்கியம் என்று முன்னைய ஆட்சியில் சில நியாயப்படுத்தல்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால், எதுவுமே நடக்கவில்லை.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை, அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை, சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்று விளக்கமளித்து, தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை அடைவதற்கான ஆதரவுச் சூழலை உருவாக்க வேண்டியது சிங்களத் தலைமைகளின் பொறுப்பல்ல.

காலம்காலமாக சிங்களத் தலைமைகள், தமிழருக்கு எதிரான விரோதத்தை கிளறி விட்டு, குரோதங்களை வளர்த்து விட்டு குளிர்காய்வதையே வழக்கமாக கொண்டிருந்தன.

தமிழருக்கு எதிரான இனவாதத்தை பயன்படுத்தி சிங்கள வாக்குகளை அள்ளுகின்ற தந்திரம், 2019 வரை நீடித்தது என்பதை மறந்து விடவோ, மறுத்து விடவோ முடியாது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-17#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.