கபில்

 “இந்தியா 13 ஆவது திருத்தச்சட்டம்முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாலும், அதற்காக மாகாண சபைத் தேர்தலை பணயம் வைப்பது புத்திசாலித்தனமான காரியமாகத் தெரியவில்லை”

 தமிழ் அரசியல்பரப்பில் தற்போது இரண்டு விடயங்கள் பற்றி அதிகம் பேசப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம், அதன் தலைமைத்துவம் முதலாவது, மாகாணசபைத் தேர்தல் சார்ந்த விடயங்கள் இரண்டாவது.

ஏற்கனவே முதுமையினால் உடலளவில் தளர்ச்சி, அடைந்து விட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவர் இரா.சம்பந்தன், கொரோனா பரவலால் வெளியில் அதிகம் தலை காட்டுவதை தவிர்த்துக் கொண்டிருக்கிறார்.

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப் படியே அவர் நடந்து கொள்ள வேண்டியிருப்பதால், அரசியல்பரப்பில் அதிகளவில் ஈடுபாடு காட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

இந்தநிலையில் அவருக்குப் பின்னர் யார் என்ற கேள்வியும், அதற்கான போட்டியும் உள்ளுக்குள் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது.

அண்மையில் ஊடகச் செவ்வி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கத் தான் தயார் என்று கூறியிருக்கிறார்.

இந்தக் கேள்வி அவரது விருப்பத்தின்பேரில் எழுப்பப்பட்டதா,கேள்வி ஒன்றை தற்செயலாக எதிர்கொண்ட போது, பதிலளிக்கப்பட்டதா என்ற தெளிவு இல்லை.

எவ்வாறாயினும், கூட்டமைப்புக்கு  தலைமை தாங்க தயாரா எனக் கேள்வி எழுப்புகின்ற போது, ஆளுமையுள்ள ஒருவர், இல்லை என்று பதிலளிக்க முடியாது.

இதேகேள்வி கடந்த பொதுத் தேர்தலுக்குப்பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நோக்கி, தமிழ் அரசுக் கட்சியின் தலைமையை ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டபோது, அவரும் ஆம் என்று கூறியிருந்தார்.

அதற்கு எழுந்த எதிர்ப்புகளைப் போலவே, சுமந்திரனின் கருத்துக்கும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-17#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.