கரைந்து போன நம்பிக்கை

Published By: Digital Desk 2

18 Oct, 2021 | 05:51 PM
image

கார்வண்ணன்

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தவறுகளில் இருந்து பாடம் கற்றுமுடிப்பதற்குள் ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து விடுவார்”

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது கொள்கைகளும் தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான தாக்குதல்களைத் தொடுக்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில், தெரிந்தோ தெரியாமலோ, அவர்களுக்கு பொல்லைக்கொடுத்து அரசாங்கத் தரப்பு அடியை வாங்கிக் கொண்டிருக்கிறது.

இருவேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிப்படுத்தியகருத்துக்களை வைத்துக் கொண்டு, நாட்டின் தற்போதைய நிலையை முன்னிறுத்திஎதிர்க்கட்சிகள் இந்த தாக்குதலைத் தொடுத்திருக்கின்றன.

“அவர்கள் எதிர்பார்த்தவை நிறைவேற்றப்படாததால் மக்கள் என் மீதும் அரசுமீதும் அதிருப்தியை உணரலாம். நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். நான் மட்டுமல்ல அனைத்துஅமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அதை ஏற்க வேண்டும்.” என இராணுவத்தின்72ஆவது ஆண்டு நிறைவில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இது தனது தோல்வியை ஜனாதிபதி ஒப்புக்கொண்டு விட்டார் என்ற வகையில்எதிர்க்கட்சிகளால் பிரசாரப்படுத்தப்பட்டது.

அதுபோன்று, அமைச்சரவைக் கூட்டத்தில் தனக்கு அரசியல் அறிவு இல்லைஎன்றும், பிரதமர் மஹிந்த தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவேண்டும் என்றும்ஜனாதிபதி கூறியதாக மற்றொரு தகவலும் வெளியாகியது.

இந்த இரண்டுமே, இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில் ஜனாதிபதி தனது இலக்கில்இருந்து தவறியிருக்கிறார் என்பதை மட்டுமன்றி- அதனை அடைவதற்கான முயற்சிகளிலும்தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்ற விம்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

தனக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும், பிரதமர் உதவ வேண்டும் என்றுஜனாதிபதி கோரிய விடயத்தை, எதிர்க்கட்சிகள் 20 ஆவது திருத்தச்சட்டத்தின்தோல்வியாகவும் அர்த்தப்படுத்தியிருக்கின்றன.

20 ஆவது திருத்தச்சட்டம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைபலப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-17#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right