குடந்தையான்

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலிலும், அதற்கு முன்னர்2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக்கட்சிக்கு மக்கள், தங்களின் பெரும்பான்மையான ஆதரவை வழங்கினர். 

இதனைத் தொடர்ந்து தி.மு.க. அரியணையில் அமர்ந்ததும், தேர்தல் காலகட்டத்தில்மக்களுக்கு வழங்கிய 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைநிறைவேற்றி, அரசாணை பிறப்பித்தது. 

இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி,தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.விற்குதங்கள் ஆதரவை அதிக அளவில் வழங்கியிருக்கிறார்கள். இதனால் தி.மு.க.வினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

மக்களவை, சட்டமன்ற பொதுத்தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் என்று தி.மு.க.தொடர்ந்து மக்களின் பேராதரவைப் பெற்று வருவதற்கு பல காரணங்களை பட்டியலிட முடியும்.அதில் வலிமையான எதிர்க்கட்சி இல்லாதது, தி.மு.க.விற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைப்பதில்அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த உணர்வும்,புதிய அணுகுமுறையும் கடைபிடிக்கப்படாதது, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. குறித்தும்,அதன் கொள்கை குறித்தும், அதன் தேசிய செயல்பாடு குறித்தும் தமிழகத்திலுள்ள சிறுபான்மைமக்களிடையேயுள்ள பாரிய அதிருப்தியை களையாதது எனப் பல விடயங்களை பட்டியலிடலாம். இதன்காரணமாகவே மக்கள் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்திருக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் என்பது கட்சி செல்வாக்கிற்கு அப்பாற்பட்டு, உள்ளுர்மக்களுக்கு சேவையாற்றும் நல்லெண்ணம் கொண்டவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்றாலும்,இதன்போதும் சட்டமன்ற இடைத் தேர்தலை போல அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு அவர்கள்விரும்பும் அன்பளிப்புகளை அளிக்க தவறவில்லை. 

வாக்காளர்களும் அரசியல் கட்சிவழங்கும் நன்கொடைகளை ஏற்க மறுக்கவில்லை. இது தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றாலும்,மக்கள் தற்பொழுது வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரவேண்டுமென்றால் அவர்களுக்கு ஏதேனும்ஒன்று இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-17#page-22

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.