(எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கவேண்டும்என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நான் நாட்டின் ஜனாதிபதியாக, பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிலையில் இடம்பெற்றதையிட்டு மிகவும் வேதனை அடைகின்றேன். 

தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி விசாணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.